தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனைத்து மதுக்கடைகளிலும் கேமரா பயன்பாட்டில் இருக்க உத்தரவு

 அனைத்து மதுக்கடைகளிலும் கேமரா பயன்பாட்டில் இருக்க உத்தரவு

 அனைத்து மதுக்கடைகளிலும் கேமரா பயன்பாட்டில் இருக்க உத்தரவு


ADDED : ஜன 26, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மதுக்கடைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என, கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

அவர், அனைத்து வகை மதுக்கடைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை;

தொடர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்யும் போது சில மதுபான கடைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பயன்பாட்டில் இல்லை. வெளிப்படைத்தன்மை மற்றும் வியாபார செயல்பாடுகளை கண்காணிப்பதை இது தவிர்த்து விடும். அதனால் கள்ளுக்கடை, சாராயக்கடை, சுற்றுலா வகையான மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உரிமம் பெற்ற மதுக்கடைகள், கிடங்குகளிலும் சி.சி.டி.வி., கேமரா பயன்பாட்டில் இருப்பதும், சரியான நேரத்தை காண்பிப்பதும் வரும் 28ம் தேதிக்குள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி., நிறுவுவதில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்னை ஏற்பட்டால் அதற்காக என்ன குறைதீர் முறைகள் கையாளப்பட்டன என, இந்த அலுவலகத்துக்கு எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அளிக்க வேண்டும். தவறினால் புதுச்சேரி கலால் சட்டம் 1970 பிரிவு 28 (பி) அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us