/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வருங்கால வைப்புநிதி குறித்து புதுச்சேரி, காரைக்காலில் முகாம்
/
வருங்கால வைப்புநிதி குறித்து புதுச்சேரி, காரைக்காலில் முகாம்
வருங்கால வைப்புநிதி குறித்து புதுச்சேரி, காரைக்காலில் முகாம்
வருங்கால வைப்புநிதி குறித்து புதுச்சேரி, காரைக்காலில் முகாம்
ADDED : செப் 26, 2024 03:20 AM
புதுச்சேரி: வருங்கால வைப்புநிதி தொடர்பாக, புதுச்சேரி, காரைக்காலில் நாளை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வருங்கால வைப்புநிதி தொடர்பாக, முகாம் நாளை 27ம் தேதி புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை தொழில் வணிக இயக்குனரகம் மாநாட்டு அரங்கத்திலும், காரைக்கால், பி.ஆர்.என்., நகர், வேட்டைக்காரன் தெருவில் உள்ள பிரைட் பட்ஸ் ஸ்கூல் பகுதியில் நடக்கிறது. இரு இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை முகாம் நடக்கிறது.
முகாமில், வருங்கால வைப்புநிதி சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் படி, புதிதாக துவங்கப்படவுள்ள நிறுவனங்களுடைய முதலாளிகள் மற்றும் தொழிலாளிகளின் கடமைகள், பொறுப்புகளை விளக்குதல். முதலாளிகள், முதன்மை முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றி செயல்முறைகள் குறித்து விக்கப்படும். .
புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல். ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட வருங்கால வைப்புநிதி தொடர்பாக முகாமில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

