/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரசாரம்
/
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரசாரம்
ADDED : ஜன 01, 2025 05:46 AM

திருபுவனை : அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி புதுச்சேரி முழுதும் வாகன பிரசாரம் நடந்தது.
மண்ணாடிப்பட்டு அடுத்த வினாயகம்பட்டில் தொடங்கிய பிரசார துவக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கொம்யூன் தலைவர் சங்கரி தலைமை தாங்கினார்.
கொம்யூன் செயலாளர் உமாசாந்தி, கமிட்டி உறுப்பினர் தவமணி முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் புஷ்பா, செயலாளர் காமாட்சி வரவேற்றனர். மாநில துணை தலைவர் சத்தியா பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
மாநில செயலாளர் இளவரசி, மாநில துணை செயலாளர் லீலாவதி, மாநில பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை குறைக்க வேண்டும். ரெஸ்டோ பார்களை மூட வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க உள்ளூர் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.

