தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அழகானந்தம் மாரியம்மன் கோவில் வீதியில் பிரசாரம்

 அழகானந்தம் மாரியம்மன் கோவில் வீதியில் பிரசாரம்

 அழகானந்தம் மாரியம்மன் கோவில் வீதியில் பிரசாரம்


ADDED : ஏப் 06, 2026 09:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 09:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சமூக சேவகரான அழகு (எ)அழகானந்தம் கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு எண்ணற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்ததால் மக்களுக்கு நல்ல அறிமுகமானவர். இதனால் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் அழகானந்தத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று காலை மாரியம்மன் கோவில் வீதியில் ஓட்டு சேகரித்தார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.நேற்று மாலை கதிர்காமம் தொகுதி ராகவேந்திரா நகர் பகுதியில் ஓட்டு சேகரித்தார். ஓட்டுச் சேகரிக்க சென்ற அழகு (எ) அழகானத்திற்கு ராகவேந்திரா கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று அழகானந்தம் தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஓட்டு சேகரிப்பின் போது அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள் இளைஞர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டு குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us