/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா?
/
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா?
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா?
ஏரிகளுக்கான நீர்வரத்து வாய்க்கால் துார்வாரப்படுமா?
ADDED : நவ 03, 2024 05:28 AM

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து ராதாபுரம், பனப்பாக்கம், மதுரப்பாக்கம் வழியாக புதுச்சேரி பகுதியான கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, கொடாத்துார், கைக்கிலப்பட்டு கிராம ஏரிகளுக்கு மழைக்காலங்களில் ராஜா வாய்க்கால் மூலம் நீர்வரத்து செல்கிறது.
இந்த நீர்வரத்து வாய்க்கால், புதுச்சேரி பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நீர்வரத்து வாய்க்கால் கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப்பின்றி, துார் வாரப்படாமல் வாய்க்கால் முழுதும் கோரை புற்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், ஏரிகளுக்கான நீர்வரத்து பாதிக்கப் படுவதுடன், கனமழையின் போது கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, செட்டிப்பட்டு, திருக்கனுார் சின்ன ஏரி, கொடாத்துார், கைக்கிலப்பட்டு உள்ளிட்ட ஏரிக்களுக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தும், குப்பைகள் கொட்டப்பட்டு துார்ந்துள்ளது. எனவே, கனமழைக்கு முன்பாக, புதுச்சேரி ஏரிகளுக்கான நீர்வரத்து ராஜா வாய்க்காலை உடனடியாக துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.