sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கலாமா?: உள்துறை அமைச்சகத்தின் கேள்வியால் கலக்கம்

/

பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கலாமா?: உள்துறை அமைச்சகத்தின் கேள்வியால் கலக்கம்

பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கலாமா?: உள்துறை அமைச்சகத்தின் கேள்வியால் கலக்கம்

பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைக்கலாமா?: உள்துறை அமைச்சகத்தின் கேள்வியால் கலக்கம்


ADDED : ஏப் 15, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பி.சி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய தேர்வாணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் பதவி உயர்வு பெறும் பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தலாமா என மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வான சிவில் சர்வீஸ் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் புதுச்சேரி சிவில் சர்வீஸ் பணியும் உள்ளடக்கம். புதுச்சேரி சிவில் சர்வீஸ் பணிக்கான, பி.சி.எஸ்., விதிகள் 1967 இல்படி உருவாக்கப்பட்டது. அப்போது 62 பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், 50 ஆண்டுகளாக இந்த விதிகளை திருத்தி, காலத்துகேற்ப மாற்றியமைக்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வு கிடைத்தும் அந்த பதவிக்கான சம்பளத்தை பெற முடியாமல் பி.சி.எஸ்., அதிகாரிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றன.

இதற்கிடையில், தற்போது புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகளின் பதவிகளின் எண்ணிக்கையை 62 இல் இருந்து 94 ஆக அதிகரிக்க மத்திய தேர்வாணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் ஒப்புதல் தர வேண்டிய தான் இன்னும் பாக்கி. உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு புதுச்சேரி அரசு திருத்தப்பட்ட பி.சி.எஸ்., விதிகளை அரசிதழலில் வெளியிட வேண்டும்.

அதன் பிறகு நேரடி நியமனத்திற்கான காலி இடங்களை நிரப்ப மத் திய தேர்வாணையத்திற்கு அனுப்பப்படும். இது பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியளித்தாலும் மற் றொரு பக்கம் கலக்கமடைய செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைப்பது சம்பந்தமாக ஆலோசித்து வருவதே இதற்கு காரணம். குறிப்பாக பதவி உயர்வு பெறும் பி.சி.எஸ்., அதிகாரிகளை பிற யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தலாமா என மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி, புதுச்சேரி அரசின் முடிவினை அறிய கோப்பு அனுப்பியுள்ளது. இது பி.சி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக சிவில் சர்வீசஸ் எழுதி தேர்வு செய்யப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐந்து மண்டலங்களாக பிரித்து நியமனம் செய்யப்படுகின்றனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, அருணாசலம், கோவா, மிசோரம் உள்ளடங்கிய அக்முத் கேடரில் வருகின்றது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துடன் அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், டையூ, டாமன், நாகர், ஹவேலி, லட்சதீவு, டில்லியும் வருகின்றது. புதுச்சேரியில் பி.சி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இவர்களை பிற டேனீஷ் யூனியன் பிரதேசங்களில் சேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எண்ணுகிறது.

இல்லையெனில், இந்த யூனியன் பிரதேசங்களில் தனித்தனியே நியமன விதிகளை திருத்த வேண்டும். அப்படி இல்லாமல் ஒரே கேடரில் கொண்டு வரலாம் என்பதே மத்திய உள்துறை அமைச்சகத்தின் கணக்காகவும் உள்ளது.

ஒரு வேளை பி.சி.எஸ்., நியமன விதிகள் இருத்தப்பட்டால் பிற மாநில யூனியன் தேசங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகள் செல்ல வேண்டி இருக்கும். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் போன்று பிற யூனியன் பிரதேசங்களில் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டி இருக்கும் என்பதால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். புதுச்சேரி அரசின் முடிவினை திக் திக் மனநிலையில் காத்திருக்கின்றனர்.

எவ்வளவு பேர்?

புதுச்சேரி பி.சி.எஸ்., பணியிடத்தில் என்ட்ரி கிரேடு, செலக் ஷன் கிரேடு, ஜூனியர் அட்மினிஸ்ட்ரேஷன் கிரேடு, நான் பங்ஷனல் கிரேடு என நான்கு பிரிவுகள் உள்ளன. என்ட்ரி கிரேடில் ரெகுலராக 7 அதிகாரிகள் உள்ளன. அடாக் அடிப்படையில் 40 அதிாகரிகள், சி.டி.சி., முறையில் 18 அதிகாரிகள் உள்ளன. செலக் ஷன் கிரேடில் 5 அதிகாரிகள், ஜூனியர் அட்மினிஸ்ட்ரேடிவ் கிரேடில் 3 அதிகாரிகள், நான் பங்ஷனல் கிரேடில் 5 அதிகாரிகள் உள்ளனர்.








      Dinamalar
      Follow us