ADDED : ஏப் 09, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஏழுமலையான் நகரிலிருந்து மூகாம்பிகை நகர் வரை கான்கிரிட் வாய்க்கால் ரூ.32.67 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணி துவக்கம் நேற்று நடந்தது. சம்பத் எம்.எல்.ஏ., பணியை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் கலந்து கொண்டனர்.