/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கனரா வங்கி கடன் மேளா மூன்று நாட்கள் ஏற்பாடு
/
கனரா வங்கி கடன் மேளா மூன்று நாட்கள் ஏற்பாடு
ADDED : அக் 07, 2024 05:56 AM
புதுச்சேரி: கனரா வங்கி சார்பில், பல்வேறு இடங்களில் மெகா ரீடைல் கடன் மேளா, இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
கனரா வங்கி சார்பில், மெகா ரீடைல் கடன் மேளா இன்று (7ம் தேதி) துவங்கி 9ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
இந்த முகாம், புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கனரா வங்கி கிளை, கடலுார், சிவா காம்ளக்ஸ், நெய்வேலி டவுன்ஷிப், சிதம்பரம் வடக்கு வீதி, மயிலாடுதுறை முதலியார் தெரு, காரைக்கால், சர்ச் தெரு, விருத்தாசலம், கடைவீதி, விழுப்புரம் கனரா வங்கி கிளை ஆகிய கனரா வங்கி கிளை ஆகிய இடங்களில் நடக்கிறது.
கடன் மேளாவில், நிலம் வாங்கி வீடுகட்ட, வீடு வாங்க, வீடு கட்ட புதுப்பிக்க வசதி உள்ளது. வீட்டு கடனுக்கு வட்டி வீதம் 8.40 சதவீதம், வாகன கடன் 8.70 சதவீதம் வழங்கப்படுகிறது. குறுகிய கால சலுகையில், பிராசசிங் கட்டணம் இல்லை,மறைமுக கட்டணம் எதுவும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.
பிற நிறுவனங்களில் பெற்று வீட்டு கடனை கனரா வங்கிக்கு மாற்ற சுலபமான வழிமுறைகள் உள்ளது.
தக்க ஆவணங்களுடன் வந்தால், உடனடியாக சி.பில், ., சர்பார்த்து கடன் ஆணையைபெற்றுக் கொள்ளலாம்.
மேலும், புதுச்சேரி, தனிநபர் கடன் பிரிவு, பிராந்திய அலுவலகம் புதுச்சேரி, 7012669320 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

