ADDED : நவ 12, 2024 07:31 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் திருநள்ளாறு கருக்கங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஆறுமுகன் மனைவி வள்ளி, 55; இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
வள்ளிக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டு கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இதனால் மன உளைச்சுடன் இருந்து வந்தார். தொடர்ந்த கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் துாக்கிட்டுக்கொண்டார்.
வீட்டில் இருந்தவர்கள் சத்தகம் கேட்டு உள்ளே சென்ற பார்த்தபோது வள்ளி நைலான் புடவையால் துாக்குபோட்டுக் கொண்டது தெரிந்து உடன் அவரை மீட்டு பாத்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
