உருளையன்பேட்டையில் வேட்பாளர் கோபால் மனைவியுடன் ஓட்டு வேட்டை
உருளையன்பேட்டையில் வேட்பாளர் கோபால் மனைவியுடன் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 05, 2026 11:24 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கோபாலை ஆதரித்து, தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கோபால் மற்றும் அவரது மனைவி ஹேமாவதி தொகுதி முழுதும் வீடு, வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர். தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனும் கோபாலுக்கு ஆதரவாக கோவிந்த சாலை, பாரதிபுரம் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்கள் நாடு முழுதும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திட்டங்கள் புதுச்சேரிக்கு வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். அதற்கு திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வரவேண்டும். அதற்கு கோபாலுக்கு ஓட்டு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.
தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
