நலத்திட்டங்கள் தொடர ஜக்கு சின்னத்தில் ஓட்டளிக்க வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
நலத்திட்டங்கள் தொடர ஜக்கு சின்னத்தில் ஓட்டளிக்க வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம்
ADDED : ஏப் 06, 2026 09:22 PM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர ஜக்கு சின்னத்தில் ஓட்டு அளியுங்கள் என கூறி என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி ஓட்டு சேகரித்தார்.
வேட்பாளர் நாராயணசாமி காலை உழவர்கரை தொகுதிகுட்பட்ட மரியாள் நகர் மகாலட்சுமி கோவிலில் பூஜை செய்து தனது பிரசாரத்தை துவக்கி, தேவா நகர், கம்பன் நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறி வீடு வீடாக துண்டு பிரசுரம் கொடுத்து ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் நாராயணசாமி கூறியதாவது: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும், முதியோர் உதவித்தொகை உட்பட அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து கிடைக்க ஜக்கு சின்னத்திற்கு, ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஓட்டுசேகரிப்பின் போது, அப்பகுதியை சேர்ந்த ஜேம்ஸ், காமராஜ், கார்த்திகேயன் உட்பட என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
