தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சொந்த கட்சியினரின் உள்ளடி வேலையால் வேட்பாளர்கள்... கலக்கம்!பட்டுவாடாவில் கை வைத்ததால் கேள்விக்குறியான வெற்றி

சொந்த கட்சியினரின் உள்ளடி வேலையால் வேட்பாளர்கள்... கலக்கம்!பட்டுவாடாவில் கை வைத்ததால் கேள்விக்குறியான வெற்றி

சொந்த கட்சியினரின் உள்ளடி வேலையால் வேட்பாளர்கள்... கலக்கம்!பட்டுவாடாவில் கை வைத்ததால் கேள்விக்குறியான வெற்றி


ADDED : ஏப் 14, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 09:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 'ப வைட்டமின்' பட்டுவாடாவில் சொந்த கட்சியினரே ஆட்டையை போட்டதால், செலவிட்ட பணத்திற்கு பலன் கிடைக்குமா என, தெரியாமல், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஜனநாயக திருவிழாவான தேர்தலில், அரசியல் கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, தேர்தல் அறிக்கைகளே பிரதானமாகும். ஆனால், சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தேர்தல் பார்முலவே வேறு விதமாக உள்ளது. 30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களே 9.5 லட்சம் தான். சராசரியாக தொகுதிக்கு 32 ஆயிரம் வாக்காளர்களே உள்ளனர். குறைந்த வாக்காளர்களே உள்ளதால், இங்கு தேர்தலில் அரசியல் கட்சிகளை விட வேட்பாளர்களே பிரதானமாக இருந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்றிட, வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்திட வேட்பாளர்கள் அன்பளிப்பு வழங்கியது போக, தேர்தலின் இறுதி கட்டத்தில் 'ப' வைட்டமின் கொடுத்தால் தான் வெற்றி பெறமுடியும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளில் 117 சுயேச்சைகள் உட்பட 294 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் தே.ஜ., கூட்டணி, இண்டி கூட்டணி, த.வெ.க., மற்றும் நா.த.க., கட்சிகளுக்கு இடையே நான்கு முனை ஏற்பட்டுள்ளதால், ஒவ்வொரு ஓட்டும் வெற்றி, தோல்வியை மாற்றி அமைக்கும் நிலை உருவானது.

அதனைத் தொடர்ந்து, பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர்ந்திட பணம், பரிசு பொருட்களை வாரி வழங்கினர். ஒரு ஓட்டுக்கு ரூ.2,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை பணம், பரிசு பொருட்கள் வழங்கி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை செலவிட்டுள்ளனர். இந்த பட்டுவாடாவை தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் செய்தனர்.

ஆனால், பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் பலர் முழு தொகையும் வாக்காளர்களுக்கு வழங்காமல், குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து கொண்டுள்ளனர். வேறு சிலரோ அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொடுத்துவிட்டு, மீதி தொகை ஆட்டை போட்டுக் கொண்ட தகவலும், அதனால் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் பலர் ஓட்டை மாற்றி போட்ட தகவல் தற்போது வேட்பாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.

சொந்த கட்சியினர் செய்த உள்ளடி வேலையால், தங்கள் வெற்றி பாதிக்கப்படுமோ என வேட்பாளர்கள் அனைவரும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us