மங்கலம் தொகுதியில் வேட்பாளரின் மகள் ஓட்டு வேட்டை
மங்கலம் தொகுதியில் வேட்பாளரின் மகள் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 05, 2026 11:24 PM

புதுச்சேரி: மங்கலம் பேட்டில் தி.மு.க., வேட்பாளர் ரங்கனுக்கு ஆதரவாக அவரது மகள் சத்யா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மங்கலம் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சிவராந்தகம் ரங்கனுக்கு ஆதரவாக மங்கலம் பேட் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிளோடு வேட்பாளர் ரங்கனின் மகள் சத்யா வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது தந்தைக்கு ஓட்டு அளித்தால் தொகுதி முழுதும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவார். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் என கூறி ஓட்டு சேகரித்தார்.
தொகுதி பொறுப்பாளர் முருகதாஸ், அவைத்தலைவர் புஷ்பா, தட்சணாமூர்த்தி, நிர்வாகிகள் ஸ்ரீஹரி, முரளி, அய்யனார், கல்யாண், தஷ்ணாமூர்த்தி, பிரகாஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பரிதி, சக்திவேல் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
