மனு தாக்கல் குறித்து வேட்பாளர்களுக்கு இன்று பயிற்சி
மனு தாக்கல் குறித்து வேட்பாளர்களுக்கு இன்று பயிற்சி
ADDED : மார் 17, 2026 04:17 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று(17 ம் தேதி) நடக்கிறது.
இதுகுறித்து துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கண்ணபிரான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, நேற்று முதல் 23ம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.
மனுக்களை பூர்த்தி செய்வது, மனுக்களுடன் வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், பாதுகாப்பு வைப்புதொகை செலுத்துதல், சத்தியப்பிரமாணம் மற்றும் மனு தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த வேட்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று(17 ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில் நடக்கிறது.
எனவே, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
