sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்பனை: 2 பேர் கைது 

 கஞ்சா விற்பனை: 2 பேர் கைது 

 கஞ்சா விற்பனை: 2 பேர் கைது 


ADDED : ஏப் 19, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:36 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலையில் மால் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, 237 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி - கடலுாரி செல்லும் சாலையில் தனியார் மால் அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி பைக்கில் நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, ஜெயமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் தீனா, 24; பெரிய கோட்டக்குப்பம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த ரவி மகன் புவியரசன், 19; என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த பைக்கை போலீசார் சோதனை செய்தபோது, டேங்க் கவரில் 237 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்து, விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, தீனா, புவியரசன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், பைக் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us