sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜூலை 26, 2025 08:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உப்பளம் எக்ஸ்போ மைதானம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். உப்பளம் எக்ஸ்போ மைதானம், எடை மேடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.

அவரை விரட்டி பிடித்து, போலீசார் விசாரித்தபோது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், விழுப்புரம், ரயில் நிலையம் அருகே சேவியர் காலனியை சேர்ந்த ஜோசப் ராஜ் (எ) கக்கா, 34; என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us