நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் மீது, கார் மோதியது தொடர்பாக, ஏற்பட்ட தகராறில், இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கென்னடி கார்டனை சேர்ந்தவர் சத்தியராஜ், 37; இவர் கடந்த 18ம் தேதி, முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே தனது பைக்கை நிறுத்திருந்தார். லாஸ்பேட்டையை சேர்ந்த பாவாடை ராஜா, 46; இவர் ஓட்டி வந்த கார், எதிர்பாரத விதமாக பைக் மீது மோதியது.
இது தொடர்பாக, இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து, இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.