/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காருக்கு தீ வைப்பு; மர்ம நபருக்கு வலை
/
காருக்கு தீ வைப்பு; மர்ம நபருக்கு வலை
ADDED : பிப் 05, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; வீட்டு எதிரில் நிறுத்திய காரை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாராயணன்,59; அரசு ஊழியர். இவர் கடந்த 1ம் தேதி இரவு 11.15 மணியளவில், பி.ஒய்.05.விடி 4533 பதிவு எண் கொண்ட காரை வீட்டு எதிரில் நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். கார் திடீரென முன்பக்கம் எரிந்து கொண்டு இருந்தது. தகவலறிந்த நாராயணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார்.
இதுகுறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.