/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் உதிரி பாகங்கள் திருட்டு: இருவர் கைது
/
கார் உதிரி பாகங்கள் திருட்டு: இருவர் கைது
ADDED : நவ 05, 2024 06:41 AM
புதுச்சேரி: கார் உதிரிபாகங்கள் திருடி வந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சேதாரப்பட்டு நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்துசேதாரப்பட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையுடன் வந்த இருவரை போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் சேதாரப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் பெருமாள் 25, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் சதீஷ் 24, என்பதும் அவர்கள் எடுத்து வந்த சாக்கு மூட்டையில் 10 காருக்கான அலுமினியம் உதிரி பாகங்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த உதிரிபாகங்களை புதுச்சேரியில் உள்ள கார் உதிரி பாகம் தாயரிக்கும் கம்பெனியில் திருடி வந்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கார் உதிரிபாகங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.