ADDED : ஆக 09, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைத்திருந்த கார் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ், 48; கடலுார் - புதுச்சேரி சாலையில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் தனது பி.ஒய் 01 சி.எப். 3637 பதிவெண் கொண்ட காரை ஒர்க் ஷாப் அருகே கடந்த மாதம் 29ம் தேதி நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோ து, காரை காணவில்லை.
தர்மராஜ் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.