/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் கண்ணாடி உடைத்து திருட்டு அரியாங்குப்பத்தில் துணிகரம்
/
கார் கண்ணாடி உடைத்து திருட்டு அரியாங்குப்பத்தில் துணிகரம்
கார் கண்ணாடி உடைத்து திருட்டு அரியாங்குப்பத்தில் துணிகரம்
கார் கண்ணாடி உடைத்து திருட்டு அரியாங்குப்பத்தில் துணிகரம்
ADDED : டிச 25, 2024 05:20 AM
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அருகே கார் கண்ணாடியை உடைத்து, 3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடிய துணிகர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்தவர் சைத்தன்யா சாய்ராம், 31. இவர், தனது குடும்ப உறவினர்களுடன், காரில், கடந்த 21ம் தேதி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.
ஆரோவில்லில் தங்கியிருந்த அவர்கள், காரில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனர்.
கடலில் குளிப்பதற்கு, சைத்தன்யா சாய்ராமின் மனைவி, அவரது குழந்தை அணிந்திருந்த செயின், தோடு, மோதிரம் உள்ளிட்ட 45 கிராம் நகைகளை கழற்றி, காரில் வைத்துவிட்டு சென்றனர்.
திடீரென காரில் இருந்து அலாரம் ஒலித்தது. உடனடியாக காருக்கு வந்து பார்த்தபோது, பின் பக்க கார் கதவின் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த நகைப் பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. திருடுபோன நகைகளின் மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து, சைத்தன்யா சாய்ராம் அளித்த புகாரின்பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

