/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய கடற்படையின் தொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி
/
இந்திய கடற்படையின் தொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி
ADDED : அக் 18, 2024 06:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பி.டெக்., மாணவர்களுக்கான இந்தியக் கடற்படையின் தொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கி, கடற்படையின் முக்கியத்துவம், புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய சின்னங்கள், தேச கட்டுமானத்தில் கடற்படையின் தாக்கம் குறித்து பேசினார். கமாண்டர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். டீன் ஞானோ புளோரன்ஸ் சுதா வரவேற்றார்.
கமாண்டர்கள் தினேஷ் தசரதன், கணேஷ் ஆகியோர் நாட்டின் கரையோரப் பாதுகாப்பில் கடற் படையின் பங்கு குறித்தும், பி.டெக் மாணவர்கள் கடற்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்றுவதற்கான பல்வேறு வழிகள் குறித்தும் விளக்கினர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் புராதன கடல்சார் பாரம்பரியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. திட்டம் மற்றும் மேம்பாடு இயக்குனர் பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை சோழவின் ஐன்விசிஸ் சி.இ.ஓ., மற்றும் முன்னாள் மாணவர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.