/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோரப்பட்டு பள்ளியில் கேரம் போட்டி பரிசளிப்பு
/
சோரப்பட்டு பள்ளியில் கேரம் போட்டி பரிசளிப்பு
ADDED : நவ 27, 2024 11:16 PM

திருக்கனுார் : பள்ளிக் கல்வித்துறை நான்காம் வட்டம் சார்பில், கேரம் விளையாட்டுப் போட்டிகள் சோரப்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை, துணை இயக்குநர் (இளைஞர் மற்றும் விளையாட்டு) வைத்தியநாதன் கேரம் விளையாட்டு போட்டியைத் துவக்கி வைத்தார். உடற்கல்வி விரிவுரையாளர் ரஷீத் அஹமத், உடற்கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
இரண்டு நாட்கள் நடந்த போட்டியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியர் சுப்ரமணியன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமரன் செய்திருந்தார். உடற்கல்வி விரிவுரையாளர் லட்சுமி, தேசிய கேரம் நடுவர் சாந்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.