தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு

சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 18, 2024 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, முதலியார் பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் தசரதன், 47; அரசு ஊழியர். இவருக்கும், இவரது அண்ணன் ராஜு (எ) ராஜூமுகமது இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் தசரதன் அவரது மனைவி உமா, ராஜூ அவரது மனைவி அனிதா ஆகிய இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் தசரதன் அளித்த புகாரின் பேரில், ராஜூமுகமது, அவரது மனைவி அனிதா மீதும், ராஜூ முகமது அளித்த புகாரின் பேரில் தசரதன், அவரது மனைவி உமா மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us