தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 25, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

வில்லியனுாரைச் சேர்ந்தவர் ஸ்ரீரஞ்சனி,28; இவருக்கும், கும்பகோணம் அடுத்த உமா மகேஸ்வரபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் பிரபுக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்தது. அப்போது, சீர்வரிசையாக 15 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஸ்ரீரஞ்சினி குடும்பத்தினர் வழங்கினர்.

அடுத்த சில மாதங்களில் ஸ்ரீரஞ்சனி, கர்ப்பமானதால் வில்லியனுாரில் வாடகை வீட்டில் கணவர் பிரபுவுடன் தனியாக வசித்து வந்தார். குழந்தை பிறந்த நிலையில், பிரபு மற்றும் அவரது குடும்பத்தார், வரதட்சணை கேட்டு ஸ்ரீரஞ்சனியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்ரீரஞ்சனி அளித்த புகாரின் பேரில், பிரபு, மாமியார் ராணி, சின்ன மாமியார் ரேணுகா, நாத்தனார் வித்யா, அவரது கணவர் ராஜா ஆகியோர் மீது வில்லியனுார் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us