/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்கு
/
எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது வழக்கு
ADDED : அக் 19, 2024 01:54 AM
புதுச்சேரி ;வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுயேச்சை எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி இந்திரகாந்தி சதுக்கம் அருகே பெட்டிக்கடை வியாபாரியை 3 பேர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில், பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., மற் றும் சமூக அமைப்பினர் நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு சிகிச்சை அளிப்பதில், கால தாமதம் ஏற்பட்டதாக, அவரை ஸ்டெச்சரில் வைத்து, கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்ட, நேரு எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மீது, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

