/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாமியரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
/
மாமியரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
ADDED : அக் 27, 2024 03:46 AM
புதுச்சேரி : மாமியரை தாக்கிய மருமகள், சம்பந்தி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரி, வேல்ரம்பட்டு நேதா நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ரீட்டா, 60. இவரது மகன் ரிச்சட். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சங்கரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் டாக்டர் என்பதால் பிம்ஸ் மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் இரவு தாயை பார்க்க ரிச்சட் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வந்த சம்பந்தி ராஜன், ராஜம், மருமகள் சங்கரி ஆகியோர் ஏன் இங்கு வந்தாய் என கேட்டு ரிச்சடிடம் தகராறு செய்தனர். இதனை தட்டிக்கேட்ட ரீட்டாவை மூவரும் சேர்ந்து தாக்கினர்.
இதுகுறித்து ரீட்டா முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.