ADDED : ஏப் 14, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி செல்வி, 59; அங்கன்வாடி உதவியாளர். நேற்று முன்தினம் அவரது வீட்டு வாலில் செல்வி தண்ணீர் தெளித்தார். அருகில் உள்ள சுரேஷ்குமார் மனைவி லீலாமேரி, 54, என்பவர் அவரை திட்டி, செங்கல்லால் தாக்கினார். அருகில் உள்ள அபிநயா, 27, என்பவரும் சேர்ந்து செல்வியை தாக்கினார்.
காயம் அடைந்த செல்வி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், லீலாமேரி, அபிநயா ஆகியோர் மீது நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
