தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 18, 2025 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வாலிபரை, தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் அருண், 30; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அருண், வீட்டின் மேல் தளத்தில் இருந்தபோது, எதிர்வீட்டை சேர்ந்த மணி என்பவர் சாலையில் சிறுநீர் கழித்தார்.

இதைகண்ட அருண், மணியை கண்டித்தார். இதனால், இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது. அதில், கோபமடைந்த மணி அவரது உறவினர் பிரதாப் ஆகியோர் கத்தி மற்றும் இரும்பு ராடால், அருணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அருணை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து வாசுகி அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us