/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு
/
காரை தரமறுத்த 3 பேர் மீது வழக்கு
ADDED : மே 01, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன், 28. இவர் 2 கார் வைத்துள்ளார்.
கடந்த ஜனவரி 19ம் தேதி இவரது நண்பர்களான சிவக்குமார், ஏழுமலை, சாய் (எ) தில்லைகணேஷ் ஆகியோர், குடும்பத்துடன் சுற்றுலா செல் சீனுவாசனிடம் கார்களை வாங்கி சென்றுள்ளனர்.
ஆனால், மீண்டும் கார்களை கொண்டு வந்து விடவில்லை. இதையடுத்து, பலமுறை சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் காரைகளை கொண்டு வந்து விடும்படி கூறியும் அவர்கள் கொண்டு வராமல் ஏமாற்றி வருகின்றனர்.
புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் காரை வாங்கி சென்ற மூன்று பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

