தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 08, 2025 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி புதிய சாரம் தென்றல் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத் ரமேஷ். இவரது மனைவி புருஷோத் சாந்தகுமாரி 50, இவர்கள் திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பிரான்சில் வசித்து வந்தனர்.

அங்கு கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாந்தகுமாரி கணவரிடம் கோபித்துக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் ரமேஷ்குமார் வீட்டில் கடந்த 17 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இதனிடையே சாந்தகுமாரி கடந்த 24ம் தேதி பாரதி வீதியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கணவரின் மூத்த சகோதரர் புருஷோத் பிரபாகரன், சகோதரிகள் புருஷோத் சகுந்தலா, திலாஸ், லலிதா ஆகியோர் சாந்தகுமாரியை திட்டி தாக்கினர்.

சாந்தகுமாரி புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us