/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விதிமுறை மீறி பட்டாசு வெடித்த 44 பேர் மீது வழக்கு
/
விதிமுறை மீறி பட்டாசு வெடித்த 44 பேர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 05:04 AM
புதுச்சேரி: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தீபாவளி அன்று காலை மற்றும் இரவு 7:00 முதல் 8:00 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என, அரசு அறிவித்தது. அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை யொட்டி, பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தனர்.
முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், காரைக்கால் உட்பட பல இடங்களில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்த 44 பேர் மீது, அந்தந்த பகுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.