தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'மாஜி' எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு

'மாஜி' எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு

'மாஜி' எம்.எல்.ஏ., மனைவி மீது தாக்குதல் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு


ADDED : டிச 27, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர், மல்லிகா, 61. இவர் மறைந்த முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தியின் மனைவி. இவரை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் நேற்று முன்தினம் தாக்கினர். தாக்கியவர்களை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமையில், அன்று இரவு முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி தகவலறிந்த முதலியார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, எப்படி வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என, ஆக்ரோஷத்துடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளி ரகளையில், ஈடுப்பட்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் முதலியார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, இரு தரப்பிரும் நேற்று தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, முதலியார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் தந்தை லீலா சேகர், 72; அவரது நண்பர் ராமமூர்த்தி, 69, இவரது மகன் பிரசன்னா, 42, மாஜி எம்.எல்.ஏ., மனைவி மல்லிகா, 61, அவரது மகள் சுஷ்மா, 31, இவரது கணவர் தீபக், 35 , ஆகிய 6 மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us