தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு


ADDED : மே 12, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஷரிபாபேகம்; பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று, அங்கு பணி செய்து வருகிறார். அவ்வபோது, புதுச்சேரியில் இருக்கும் உறவினர்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். இவர், வாணரப்பேட்டையை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் ரமேஷ், 38, என்பவருக்கு கடன் கொடுத்தார். புதுச்சேரிக்கு வந்த அவர்,நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவரிடம் கொடுத்த கடனை கேட்டார். ஆத்திரமடைந்த, அவர், ஷரிபாபேகத்தை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, அவர், ஒதியஞ்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ரமேஷ் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us