தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோரம் 'ஹெல்மெட்' விற்ற பீகார் மாநிலத்தவர் மீது வழக்கு

சாலையோரம் 'ஹெல்மெட்' விற்ற பீகார் மாநிலத்தவர் மீது வழக்கு

சாலையோரம் 'ஹெல்மெட்' விற்ற பீகார் மாநிலத்தவர் மீது வழக்கு


ADDED : ஜன 24, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரம் கடை அமைத்து ஹெல்மெட் விற்பனை செய்த பீகார் மாநிலத்தவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரியில் ெஹல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், ஹெல்மெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வட மாநில வியாபாரிகள், சாலையோரம் கடைகளை அமைத்து தரமற்ற ஹெல்மெட்டுகளை விற்பதாக புகார் வந்தது.

புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., மோகன்குமார், தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ஆய்வு செய்து, சாலையோர ஹெல்மெட் வியாபாரிகளை எச்சரித்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், மீண்டும் போக்குவரத்திற்கு இடையூராக அரியாங்குப்பம் புதிய பாலம் அருகில், ஹெல்மெட் விற்பனை செய்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த சதிஷ்குமார், 41, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us