ADDED : மே 06, 2025 04:52 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் நான்காம் வகுப்பு படித்த மாணவனை மாடு முட்டியதால்
மாட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது சையது அசுனுதீன்.
கோழிக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது மகன் அப்துல் மஜித், 9; நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
அப்துல்மஜீத் வீட்டு வாசலில் வெளியே சென்ற போது அப்போது பசுமாடு ஒன்று அப்துல் மஜீத்தின் வயிற்றில் முட்டியது. காயமடைந்த அப்துல்மஜீத்தை உறவினர்கள் திருபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
முகமது சையது அசுனுதீன் புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் மாட்டின் உரிமையாளர் திருப்பட்டினம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த பழனி,55; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
