/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2025 01:24 AM
புதுச்சேரி : திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 48. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், அங்குள்ள சாலையோரம், மொபைல் பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் லாஸ்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
கடந்த 19ம் தேதி, லாஸ்பேட்டைக்கு வந்த ராமகிருஷ்ணன், மனைவி அனிதாவை வீட்டிற்கு அழைத்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ராமகிருஷ்ணன், அருகில் கிடந்த செங்கல்லால் மனைவியை தலை மற்றும் வயிற்று பகுதிகளில் தாக்கினார்.
இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், ராமகிருஷ்ணன் மீது சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.