/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உருளையன்பேட்டை, ராஜா நகரை சேர்ந்தவர் வசந்தராஜ், 32. இவரது மனைவி கஜலட்சுமி, 30. இவர், தனியார் ஐ.டி., நிறுவன ஊழியர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். வசந்தராஜ், மனைவியிடம் விவாகரத்து கேட்டு தொடர்ந்து பிரச்னை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி விவாகரத்து கேட்டதற்கு கஜலட்சுமி மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த வசந்தராஜ், கஜலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், வசந்தராஜ் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

