/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்சூரன்ஸ் பாலிசியில் மாற்றம் லாரி உரிமையாளர் மீது வழக்கு
/
இன்சூரன்ஸ் பாலிசியில் மாற்றம் லாரி உரிமையாளர் மீது வழக்கு
இன்சூரன்ஸ் பாலிசியில் மாற்றம் லாரி உரிமையாளர் மீது வழக்கு
இன்சூரன்ஸ் பாலிசியில் மாற்றம் லாரி உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூலை 24, 2025 03:39 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, புதுப்பேட் முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் குந்தவை, 24. இவர், கடந்த 2023ம் ஆண்டு பிப்., 16ம் தேதி தனது ஸ்கூட்டியில் மடுவுப்பேட் இ.சி.ஆரில் வந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி ஸ்கூட்டி மீது மோதியது. குந்தவை படுகாயமடைந்தார்.
விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். காயமடைந்த குந்தவையின் குடும்பத்தினர் ரூ. 90 லட்சம் இழப்பீடு கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே, வழக்கில் தாக்கல் செய்த விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரியின் இன்சூரன்ஸ் பாலிசியை, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த பாலிசியில் தேதி மற்றும் நேரத்தில் மாற்றம் செய்து, போலியாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நிறுவன புதுச்சேரி மேலாளர் சுரேஷ்குமார், தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி பாலிசியை தயார் செய்தவர் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்க கோரி, புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், டேங்கர் லாரியின் உரிமையாளர் கடலுார், புதுபாளையத்தை சேர்ந்த புருேஷாத்தமன் மனைவி சுகன்யா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.