/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தந்தையின் ஸ்கூட்டியை எரித்த மகன் மீது வழக்கு
/
தந்தையின் ஸ்கூட்டியை எரித்த மகன் மீது வழக்கு
ADDED : டிச 26, 2024 05:57 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஜீவானந்தம், 70. இவர் கருவடிக்குப்பத்தில் உள்ள காளி கோவில் ஒன்றை டிரஸ்டி மூலம் நிர்வாகித்து வருகிறார். கோவிலுக்கு, அவரது மகன் பிரளயன் வந்து செல்வது பிடிக்காமல், கடந்த 21ம் தேதி கண்டித்தார்.
நேற்று முன்தினம் இரவு ஜீவானந்தம் வீட்டில் துாங்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அவரது மகன் பிரளயன், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததுடன், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை தீ வைத்து எரித்தார்.
இதனை ஜீவானந்தம் கண்டித்தால் ஆத்திரமடைந்த பிரளயன், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில், அவரது மகன் பிரளயன் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.