UPDATED : மே 19, 2026 06:30 PM
ADDED : மே 19, 2026 06:14 PM
காரைக்கால்: காரைக்காலில் தனது சகோதரியை பின் தொடர்ந்த சென்ற உடற்கல்வி ஆசிரியர் மீது பைக்கால் இடித்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். .
காரைக்கால் திருநள்ளாறு தென்னங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த குணசேகரன் இவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும் பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டது.
இது பற்றி அறித்த பெண்ணின் சகோதரர் லுார்து பிரான்சிஸ்.32; ஆத்திரமடைந்து
கடந்த 16ம் தேதி பாரதிய சாலையில் நடந்து சென்ற குணசேகரன் மீது பைக்கால் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த குணசேகரனை அருகில் இருந்தவர் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் நகர போலீசார் லுார்துபிரான்சிஸ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
