ADDED : மார் 20, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சன்னியாசிதோப்பு மெயின் ரோட்டில், பொதுமக்களுக்கு இடையூறாக 8 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில், நகராட்சி உதவிப் பொறியாளர் யுவராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பேனர்கள் வைத்த நபர் மீது, ஓதியன்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.