ADDED : ஏப் 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புஸ்சி வீதியில் பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி புஸ்சி வீதி, கம்பன் கலையரங்கம் அருகில், நடை பாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சியினருக்கு புகார் வந்தது.
அதையடுத்து, நகராட்சி அதிகாரி நேற்று ஒதியன்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.