ADDED : ஜூலை 10, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜிவ் சதுக்கத்தில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி ராஜிவ்  சதுக்கம் அருகில் சாலையோர நடைபாதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறையினருக்கு புகார்  வந்தது. அதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி நேற்று  உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் பேனர் வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

