/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் சாலை பகுதியில் பேனர் வைப்பதால், போக்குவரத்து, நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரெட்டியார்பாளையம் சாலையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக நேற்று முன்தினம் ரோந்து சென்ற பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர் ஜெயராஜ், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.