/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கமிஷன் தராமல் மிரட்டல்: மூவர் மீது வழக்கு
/
கமிஷன் தராமல் மிரட்டல்: மூவர் மீது வழக்கு
ADDED : பிப் 06, 2025 07:10 AM
புதுச்சேரி; வியாபாரத்திற்கான கமிஷன் தராமல், சக நண்பரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
முத்திரையர்பாளையம், கோவிந்தன்பேட் அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 49; தனியார் கம்பெனிகளில், ஸ்கிராப் வாங்கும் தொழில் செய்கிறார். கரசூரில் உள்ள தனியார் பேப்பர் மில்லின் உபகரணங்கள் விற்பனைக்கு வருவது தெரிந்து, ரவிச்சந்திரன் அவரது வியாபார நண்பர்களான கோயம்புத்துார் சசி, மதுரை பாண்டியராஜன், பெரியசாமி ஆகியோருடன் சென்று, மில் உரிமையாளரிடம் பேசி ரூ. 95 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதற்காக, ரவிச்சந்திரன் செலவு செய்த பணம் ரூ. 3.5 லட்சம், கமிஷன் தொகை ரூ. 3 லட்சத்தை தராமல், வியாபார நண்பர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதனால், கடந்த டிச. 26ம் தேதி இரவு பேப்பர் மில்லில் இருந்து, ஸ்கிராப் ஏற்றி கொண்டு சென்ற லாரியை ரவிச்சந்திரன், சேதராப்பட்டு சந்திப்பு அருகே மடக்கி, தனது கமிஷன் தொகையை கேட்டுள்ளார். அப்போது, சசி, பாண்டியராஜன், பெரியசாமி ஆகியோர் பணம் தர மறுத்து, மிரட்டி சென்றனர். இது குறித்து, நேற்று முன்தினம் ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார். சசி உள்ளிட்ட மூவர் மீது சேதராப்பட்டு போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.