/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : டிச 29, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணபதிசெட்டிக்குளம் முன்சிபல் வீதியைச் சேர்ந்தவர் ஜெயரட்சகன், 26; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் மதியம் பெங்களூருவில் இருந்து கணபதிசெட்டிக்குளம் வந்தார். மாலை 4:00 மணியளவில் வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், குமரவேல் ஆகியோர் ஜெயரட்சகன் உறவினரான நர்மதாவை இடிப்பது போல் வந்தனர்.
இதனை தட்டிக்கேட்ட ஜெயரட்சகனை, இருவரும் சேர்ந்து செங்கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

