/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர் இருவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர் இருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 02, 2025 03:25 AM
புதுச்சேரி : கதிர்காமத்தில் அனுமதியின்றி சாலையின் நடுவே பேனர் வைத்திருந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், போக்குவரத்துக்கு இடையூராக பேனர்கள், கட் அவுட் வைப்பது குறைந்ததாக தெரியவில்லை.இந்நிலையில், வடக்கு போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு கதிர்காமம், வழுதாவூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வழுதாவூர்சாலையில் உள்ளதனியார் பெட்ரோல் பங்க் மற்றும் வி.வி.பி., நகர் நுழைவு வாயில் அருகே அனுமதியின்றி போக்குவரத்து இடையூராக சாலையின் நடுவே பிறந்தநாள் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, அனுமதியின்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூராக பேனர்கள் வைத்திருந்த கதிர்காமத்தை சேர்ந்த சுப்ரமணியன், ராஜீ ஆகியோர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

