/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
/
கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
ADDED : அக் 22, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முன்விரோதத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வானரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 53. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பிரான்சுவா தோப்பு பகுதியைச் சேர்ந்த பரத், 21, என்பவர் முன்விரோதம் காரணமாக சுப்ரமணியனை ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். சுப்ரமணியன் புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, பரத்தை தேடி வருகின்றனர்.