தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் அனுமதியின்றி பேரணி பா.ஜ.,வினர் 11 பேர் மீது வழக்கு பதிவு

 புதுச்சேரியில் அனுமதியின்றி பேரணி பா.ஜ.,வினர் 11 பேர் மீது வழக்கு பதிவு

 புதுச்சேரியில் அனுமதியின்றி பேரணி பா.ஜ.,வினர் 11 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 26, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அனுமதியின்றி காங்., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை கண்டித்து பேரணி நடத்திய பா.ஜ.,வினர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்து முடிந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் வரும் 6ம் தேதிவரை நடைமுறையில் உள்ளது. அதனால், போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதி வழங்குவதில்லை. அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றாலும், தேர்தல் துறையின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை கண்டித்து புதுச்சேரியில் நேற்று முன்தினம் பா.ஜ., சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், தேர்தல் துறையில் அனுமதி பெற்றுவிட்டதாக கூறி சுதேசி மில் முதல் அண்ணா சிலை வரை பேரணி நடத்தினர். இந்த பேரணியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில், அரசு ஊழியரின் உத்தரவை மீறி, சட்ட விரோதமாக கூறி, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பேரணி நடத்தியதாக ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், பா.ஜ,, சட்டப்பிரிவு மாநில இணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது பிரிவு 189(2) பி.என்.எஸ், பிரிவு 285 பி.என்.எஸ்., பிரிவு 223(எ) பி.என்.எஸ்., உடன் இணைந்த 190 பி.என்.எஸ்., பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us